மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனிடையே தொகுதி மறுசீரமைப்பு என்பது மோடி அரசின் சதி திட்டம் என திமுக எம்.பி. ஆ.ராசா விமர்சித்து உள்ளார்.
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் உள்ள நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் தற்போதுள்ள தொகுதிகளை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இதனால் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி உள்ளன. இதில் கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களும் களம் குதித்து உள்ளன.
இந்த நிலையில் தொகுதி மறுசீரமைப்பு என்பது மோடி அரசின் சதி திட்டம் என் திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக ஆ.ராசா கூறியதாவது:-
தொகுதி மறுசீரமைப்பை கொண்டு வந்து, தென் மாநிலங்கள் இல்லாமல் வட மாநிலங்களை கொண்டே இந்தியாவை ஆள வேண்டும் என ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு சதித்திட்டம் தீட்டி வருகிறது. தமிழ்நாட்டின் வரியை பெற்றுக்கொண்டு வட மாநிலங்களான உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கூடுதல் நிதி வழங்கி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை வழங்காமல் நம்மை வஞ்சித்து வருகிறது. இதனை துணிச்சலோடு கேள்வி கேட்ட ஒரே தலைவர் இந்தியாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே தொகுதி மறுசீரமைப்பு என்ற திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு செயல்படுத்த முயன்றதை முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டத்திற்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை பாஜக அரசு ஏற்க மறுத்தது. மேலும் அண்ணாமலை தரப்பில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து தெளிவான விளக்கம் அளித்து இருந்தார். எனினும் அதனை ஏற்க மறுத்த திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொகுதி மறுசீரமைப்பை எதிர்க்க தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் தொகுதி மறுசீரமைப்பு என்பது பிரதமர் மோடியின் சதி என்று திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்து உள்ளார்.