எனக்கு சினி​மா​வில் வழி​காட்ட யாரு​மில்​லை: சமந்தா

எனக்கு சினி​மா​வில் வழி​காட்ட யாரு​மில்​லை. வேறு மொழிகள் கூட தெரி​யாமல்​தான் இருந்​தேன் என்று சமந்தா கூறினார்.

சமந்தா நடித்த, ‘சிட்​டாடல்: ஹனி பன்னி’ என்ற வெப் தொடர், கடந்த ஆண்டு வெளி​யானது. அடுத்​து, ‘மா இண்டி பங்​காரம்’ என்ற தெலுங்கு படத்​தைத் தயாரித்து நடிக்​கிறார். மயோசிடிஸ் நோயால் பாதிக்​கப்​பட்​டிருந்த அவர், இப்​போது அதிலிருந்து மீண்டு சினி​மா​வில் கவனம் செலுத்தி வரு​கிறார். இந்​நிலை​யில் சினி​மா​வில் 15 வருடத்தை நிறைவு செய்​துள்​ளார் சமந்​தா. இதற்​காகச் சென்னை​யில் நடந்த நிகழ்ச்​சி​யில் கலந்​து​கொண்ட அவர், தனது 15 ஆண்டு கால சினிமா வாழ்க்கை ஆசிர்​வ​திக்​கப்​பட்​டது என்று தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து சமந்தா கூறிய​தாவது:-

முதல் படமான ‘மாஸ்​கோ​வின் காவிரி’​யில் என் நண்​பர் ராகுல் ரவீந்​தரனுடன் நடித்​தேன். அந்த படம் பற்​றிய நினை​வு​கள் அதி​கம் இல்​லை. அடுத்த படமான ‘யே மாயா சேசவே’ (விண்​ணைத் தாண்டி வரு​வாயா -தெலுங்கு பதிப்​பு) படத்​தின் ஒவ்​வொரு ஷாட்​டும் இப்​போதும் நினை​வில் இருக்​கிறது.

சினி​மா​வில் பதினைந்து வருடங்​கள் என்​பது நீண்ட காலம். இப்​போது நான் நடித்த சில படங்​களைப் பார்க்​கும்​போது, இவ்​வளவு மோச​மாகவா நடித்​திருக்​கிறேன் என்று தோன்​றுகிறது. ஆனால் நான் அப்​படித்​தான் கற்​றுக்​கொண்​டேன். எனக்கு சினி​மா​வில் வழி​காட்ட யாரு​மில்​லை. வேறு மொழிகள் கூட தெரி​யாமல்​தான் இருந்​தேன்.

எல்​லா​வற்​றை​யும் புதி​தாகக் கற்​றுக்​கொள்ள வேண்​டி​யிருந்​தது. எனக்கு சினி​மா​வில் நண்​பர்​கள் இல்​லை, தொடர்​புகள் இல்​லை, உறவினர்​கள் இல்​லை. எல்​லாம் புதி​தாக இருந்​தது, பிறகு வேலை​யைக் கற்​றுக் கொண்​டேன். இந்த 15 வருடங்​கள் கற்​றுக்கொள்​ளும் அனுபவ​மாக இருந்​தது. இப்​போதுஎன் பலம், பலவீனம் தெரி​யும் என்​ப​தால் அடுத்த 15 வருடத்தை ஆவலாக எதிர்பார்க்​கிறேன். இவ்​வாறு சமந்தா கூறியுள்ளார்.