நான் ஒரு பெண்ணாக பிறந்ததால் பெருமையாக தான் நினைக்கிறேன்: கஸ்தூரி!

நடிகை கஸ்தூரி சின்னத்திரை, வெள்ளித்திரை, அரசியல் என்று பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். அதிலும் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குறித்து அவர் பேசிய விளக்கம் இணையத்தில் அதிகமாக கருத்துக்களை பெற்று வருகிறது.

சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தும் நபர்களின் ஒருவராக நடிகை கஸ்தூரியும் இருந்து வருகிறார். இவர் ஆரம்பத்தில் 80ஸ் இறுதி காலகட்டத்தில் சினிமாவில் நுழைந்திருந்தாலும் 90ஸ் காலகட்டத்திலும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அதே போல இந்தியன் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு மற்றும் டான்ஸ் பலருடைய ஃபேவரைட். கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக சின்னத்திரை ரசிகர்களுக்கு அதிகமாக பரீட்சையமாகி இருந்தார். இப்போதும் திரைப்படங்கள் சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சமூக வலைத்தளத்தில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சினைகள், அரசியல் பிரச்சனைகளுக்கு அடிக்கடி குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது ஆண்கள் குறித்து அவர் பேசிய விளக்கம் இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. அதில் அவர் பேசுகையில், பொதுவாக ஆண்களை நம்பி எந்த பயனும் இல்லை என்று தான் நான் சொல்வேன். அவங்களுக்கு பொறுப்பு இருக்கணும் என்று நாம நினைக்கவே கூடாது. ஒரு பெண்குடிச்சுட்டு பிள்ளைகளை கவனிக்காம குடும்பத்தை அழிச்சிட்டான்னு நீங்க கேள்வியே பட முடியாது. எங்கயாவது கோடியில் ஒரு குடும்பம் வேணா அப்படி இருக்கும். ஆனால் ஒரு ஆணால் அழிந்த குடும்பம் அதிகமாக இருக்கு. வீட்டோட சாவிக்கொத்து ஒரு பெண் கிட்ட இருந்தா அந்த பெண் அந்த குடும்பத்தை உயர்த்த தான் பார்ப்பாங்க. ஒரு நூறு ரூபாய் இருந்தால் அதை எப்படி செலவு செய்யலாம் என்று ஒரு ஆண் நிமிடத்திற்குள் செலவழித்து முடித்து விடுவார்கள். ஆனால் ஒரு பெண் கிட்ட அதே 100 ரூபாய் இருந்தா குடும்பத்திற்காக என்னவெல்லாம் செய்யலாம் என்று கணக்கு போடுவாங்க, செலவழிப்பாங்க. கடைசியில் அந்தத் தாய்க்கு எதுவுமே இருக்காது.

நான் ஒரு பெண்ணாக பிறந்ததால் பெருமையாக தான் நினைக்கிறேன். நான் பல பெண்களுக்கு ஆண்கள் செய்ய முடியாத உதவிகளை செய்து இருக்கிறேன். என்கூட பிறந்த சகோதரிகள், என்னுடைய இரண்டு குழந்தைகள் மற்றும் என்னுடைய உடன்பிறவா பல சகோதரிகளுக்கு என்னால் முடிந்த அளவிற்கு நான் உதவிகள் செய்து இருக்கிறேன். பெண்ணாக இருப்பதால் அவர்களுக்கு என்னால் அந்த உதவிகளை எல்லாம் செய்ய முடிந்தது என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.