நான் மாடர்ன் உடை போட காரணமே இதுதான்: சிவாங்கி!

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி நிகழ்ச்சி போன்ற பல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவாங்கி இப்போது சினிமாவிலும் அடுத்தடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பேட்டி ஒன்றில் பதில் கொடுத்திருக்கிறார். அதிலும் தான் போடும் ஆடை குறித்து வரும் விமர்சனங்களுக்கு அதில் சிவாங்கி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு பாடகியாக வேண்டும் என்று கலந்து கொண்ட சிவாங்கி அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். ஆனாலும் இவருடைய கலகலப்பான பேச்சு மற்றும் நடவடிக்கையை பார்த்து இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சி தான் சிவாங்கியை ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலப்படுத்தியது என்று சொல்லலாம். அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சிவாங்கி பாடும் பாடல் பலரும் கேட்டு ரசித்தது அந்த நிகழ்ச்சியில் தான்‌. அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக முதல் மூன்று சீசன்கள் கலந்து கொண்ட சிவாங்கி நான்காவது சீசனில் குக்காக மாறி இருந்தார். ஒவ்வொரு வாரமும் அவருடைய பாடல்கள் கேட்டு இப்படி ஒரு திறமையா என்று எல்லோரும் வியந்து போயிருந்தனர்.

அதுவரைக்கும் சிவாங்கி பேசும் குரலுக்கும் பாடல் என்று வரும்போது அவருடைய குரலுக்கும் வேறு விதமாக இருப்பது பலருக்கும் ஆச்சரியம் கொடுத்திருந்தது. சிவாங்கியை போலவே அவருடைய அம்மா பிரபல பாடகியாக இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பார். அதுபோல சிவாங்கியின் அம்மா பென்னி சன் டிவியில் ஒளிபரப்பான டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகவும் கலந்து கொண்டார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அஸ்வினை அடிக்கடி கலாய்த்து அவரை பெரிய அளவில் பிரபலமாக்கி விட்டார்.

அதற்கு பிறகு சிவாங்கிக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அதிலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட சிவாங்கி தன்னைப் பற்றிய நெகட்டிவ் கமாண்டுகளுக்கு பதில் கொடுத்து இருக்கிறார். அதில் சிவாங்கி கூறியுள்ளதாவது:-

சோசியல் மீடியாவில் நான் போஸ்ட் போடும் போது சிலர் தவறாக பேசுவார்கள். அதைப் பற்றி எல்லாம் நான் கண்டு கொள்வது கிடையாது. அதிலும் நான் மாடர்ன் உடை போட்ட போது வாய்ப்புக்காக ஆடையை குறைத்து விட்டார், இப்படி அவுத்து போட்டுக்கிட்டு திரியிறா என்றெல்லாம் திட்டினார்கள். ஆனால் வாய்ப்புக்காகவெல்லாம் அப்படி செய்யவில்லை. ஆரம்பத்தில் கொஞ்சம் குண்டாக இருந்தேன் அப்போது மாடர்ன் உடை எனக்கு செட்டாகாது. அதற்குப் பிறகு நான் உடல் மெலிந்த பிறகு எனக்கு அந்த மாதிரி உடைகள் போட வேண்டும் என்று ஆசை இருந்தது. அதனால் அதை போட்டு புகைப்படங்கள் எடுத்தேன் அவ்வளவுதான். வேற எதற்காகவும் இல்லை.

எல்லோருக்குமே அவர்களுக்கு பிடித்த உடை போடுவது விருப்பம் இருக்கும் அதை தான் நானும் செய்தேன். நான் வெளிநாட்டிற்கு சென்றிருந்தபோதுதான் ஷார்ட்ஸ் போட்டோ சூட் எடுத்து இருந்தேன் அதுவரைக்கும் ஷார்ட்ஸ் எல்லாம்போட்டு வெளியில் வந்தது கிடையாது. ஆனால் வெளிநாட்டில் அந்த மாதிரி உடை அணிந்தது எனக்கு சந்தோஷமா இருந்தது .அதனால் நான் அந்த போட்டோவை போஸ்ட் போட்டேன். அதற்காக அதிகமானோர் கமாண்டுகளில் திட்டி இருந்தார்கள். இவ்வாறு சிவாங்கி கூறியுள்ளார்.