இதுகுறித்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூகநீதியும்!
பஞ்சமர் நில மீட்பும்! எனும் மாபெரும் பேரணி – பொதுக்கூட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னின்று நடத்துகிறது.
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தமிழ்த்தேசிய அரசியலின் பேராசன் நம்முடைய ஐயா பெ.மணியரசன் அவர்களின் தலைமையில், தமிழ்நாட்டின் பல்வேறு தளங்களில், களங்களில் மக்களின் பிரச்சினைகளுக்காக இயங்கி வருகிற, போராடி வருகிற மிக முதன்மையான அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் எல்லோரும் பங்கேற்று இந்தப் பேரணி – பொதுக்கூட்டத்தைச் சிறப்பிக்கவிருக்கிறார்கள்.
மானத்தமிழ் மக்கள் நாம் எல்லோரும் மறக்காமல் கூட வேண்டும்.
பஞ்சமர் நில மீட்பே! பைந்தமிழர் உரிமை மீட்பு!
ஆதித்தமிழர் விடுதலை இல்லாது; மீதித்தமிழர் விடுதலை வெல்லாது!
என்ற முழக்கங்களை முன்வைத்து இந்தப் போராட்டத்தை நாம் முன்னெடுக்கிறோம்.
வருகிற 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெறுகிறது.
எல்லோரும் கூடுவோம்! இனத்தின் உரிமையை மீட்போம்!
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க சாதிவாரிக் கணக்கெடுப்பே சரியான சமூகநீதி!
வீறுகொண்டு எழுவோம்! வெற்றி கண்டு மகிழ்வோம்! நாம் தமிழர்! இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.