தலாய் லாமாவிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

திபெத்தியர்களின் ஆன்மிகத் தலைவரான தலாய் லாமாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 87வது பிறந்தநாளைக் கொண்டாடும் தலாய் லாமாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தொலைபேசியில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். நீண்ட ஆயுளோடும், நல்ல ஆரோக்கியத்திற்கும் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். தலாய் லாமா, 1959-ம் ஆண்டு சீனாவை விட்டு வெளியேறி இந்தியாவில் வாழ்ந்து வருகிறார். உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் ஆன்மிகத் தலைவர்களில் ஒருவர் என்று அவர் பதிவிட்டுள்ளார்.