தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை!

‘போர் தொழில்’ பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், ‘இட்லி கடை’ படத்தை இயக்கி நடித்து வரும் தனுஷ், “தேரே இஸ்க் மெய்ன்” என்ற பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல், ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55-வது படத்தை உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளது.

அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இயக்குனர் விக்னேஷ் ராஜா இதற்குமுன் இயக்கிய படம் ‘போர் தொழில்’, இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை பற்றி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, 23 வயதில் நாயகியாக தமிழ் மற்றும் மலையாள படங்களில் கலக்கி வரும், நடிகை மமிதா பைஜு தான் இப்படத்தில் கதாநாயகியாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மமிதா பைஜு பிரதீப் ரங்கநாதன், விஜய் மற்றும் விஷ்னு விஷால் ஆகியோரின் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.