கையாலாகாத திமுக அரசால் இன்னும் எத்தனை உயிர்களைப் பலிகொடுக்கப் போகிறோம்?: அண்ணாமலை!

திருநெல்வேலியில் ஓய்வுப்பெற்ற காவல் அதிகாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக அரசை பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

திருநெல்வேலி டவுன் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி. இவர் ஓய்வுப்பெற்ற காவல் துறை அதிகாரி ஆவார். இவர் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போது உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் மேயர் காலத்தில் அவர்களது தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரியாக இருந்துள்ளார். இவர் நெல்லை டவுன் பகுதியில் உள்ள ஜா்கான் தைக்காவில் அறங்காவலராக இருந்து வந்தார். இதற்கு அருகில் உள்ள 32 சென்ட் நிலம் தொடர்பாக பல பிரச்சினைகள் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலப்பிரச்சினை ஒரு புறம் இருக்க, நேற்று காலையில் ஜாகிர் உசேன் பிஜிலியை மர்மநபர்கள் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தென்மாவட்டங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்த நிலையில் நெல்லை கொலை விவகாரத்தில் திமுக அரசை பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-

திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன், இன்று(நேற்று) காலையில் தொழுகை முடித்து சென்போது மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டரர். இந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

பணி ஓய்வுக்குப் பிறகு, சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர், வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்துக் குரல் கொடுத்து உள்ளார். அதனால் அவருக்குக் கொலை மிரட்டல்கள் இருந்து வந்ததாக, சில நாட்களுக்கு முன்பு அவர் பேசிய காணொளி தற்போது வெளியாகியிருக்கிறது.

ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கே கொலை மிரட்டல் வந்ததுடன், அவரை மர்மநபர்கள் படுகொலை செய்யும் அளவுக்குத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. மேலும் சாதாரண மக்களின் புகார்களை காவல்துறை கண்டு கொள்வதில்லை.

திமுக அரசை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டுமே காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. இந்த கையாலாகாத திமுக அரசால் இன்னும் எத்தனை உயிர்களைப் தமிழ்நாட்டில் பலி கொடுக்கப் போகிறோம்? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.