பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் குடும்பத்துடன் மும்பையில் உள்ள ஜுகு பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் வீடு அருகே நேற்று சொகுசு கார் மீது மாநகர பஸ் மோதி விபத்துக்குள்ளானது. முன்னால் சென்றுகொண்டிருந்த கார் மீது பின்னால் வந்த பஸ் மோதியது. இதில், காரின் பின்பகுதி லேசான பாதிப்பு அடைந்தது.
நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் கார் மீது நேற்று பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த மோதலில் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. அவரது மெய்க்காப்பாளர்கள் நிலைமையை கண்டு காரை விட்டு வெளியே வந்தனர். இந்தச் சம்பவத்தால் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, காருக்கு பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஒரு சிறிய விவாதத்திற்குப் பிறகு, அங்கிருந்து கார் புறப்பட்டது. ‘5050’ என்ற பதிவு எண்ணைக் கொண்டது ஐஸ்வர்யா ராய் பச்சனின் கார். அதன் மூலம் பேருந்துடன் மோதியது ஐஸ்வர்யா ராயின் கார் என்பது தெரியவந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், ரசிகர்கள், ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு என கவலையுடன் கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.
இருப்பினும், இந்தச் சம்பவத்தின் போது நடிகை ஐஸ்வர்யா ராய், காரின் உள்ளேயோ அல்லது வெளியேயோ தென்படவில்லை. எனவே விபத்தில் சிக்கியபோது அவர் காரில் இருந்தாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.