தியேட்டர்களில் வெளியானது விக்ரமின் வீர தீர சூரன்!

வீர தீர சூரன் படம் எல்லா பிரச்சனைகளும் முடிந்த நிலையில் தியேட்டர்களில் ஈவ்னிங் ஷோ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ படத்தை திரைப்படத்தை 4 வாரங்களுக்கு வெளியிட தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பிரச்சனைகள் எல்லாம் முடிவடைந்து தற்போது தியேட்டர்களில் ஈவ்னிங் ஷோ ரிலீஸாகி உள்ளது.

ஒப்பந்ததை மீறி ஓடிடி உரிமை விற்கப்படும் முன் படத்தின் ரீலீஸ் தேதியை அறிவித்ததால், திரைப்படத்தை வெளியிடுவதற்கு எதிராக பி4யு நிறுவனம் தொடர்ந்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

முன்னதாக, வீர தீர சூரன் ரிலீஸ் விவகாரத்தில் உடனடியாக 7 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் படம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் 48 மணி நேரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து படத்தின் தயாரிப்பாளரான ஷிபு நீதிமன்றத்தில் ஆஜராகி, இரு தரப்பிற்குள்ளும் பேச்சுவார்த்தைக்கு பின் ஒரு செட்டில்மெண்ட் முடிவுக்கு வந்துள்ளோம் எனத் தெரிவித்தார். அத்துடன், இருவரும் ரூ. 2.5 கோடி ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும் கூறினார். இதை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதையடுத்தே படம் தற்போது அனைத்து தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆகியுள்ளது.

முன்னதாக நடிகர் விக்ரம் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் வீரதீரசூரன். இப்படத்தினை சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில், இந்தப்படத்தில் முதலீடு செய்த பி4யு நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அந்த வழக்கில், ஓடிடி உரிமை எங்களிடம் இருக்கும் நிலையில், படத்தை ஓடிடியில் விற்கும் முன்னரே படத்தின் ரிலீஸ் தேதி படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால், எங்களுக்கு பணநஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது என்று கூறியிருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது.