மீண்டும் மீண்டும் அஜித்துடன் பணியாற்ற விரும்புகிறேன்: பிரியா வாரியர்!

‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்துடன் இணைந்து பணியாற்றியது குறித்து நடிகை பிரியா வாரியர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரியா வாரியர், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் படம் நேற்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 1,000-க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியானது.

இந்த நிலையில், ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்துள்ள பிரியா வாரியர் தனது இன்ஸ்டாகிராமில் அஜித்துடன் நடித்தது குறித்து பதிவிட்டுள்ளார். அதில், “நீங்கள் ஒரு ஜெம் அஜித் சார். உங்களுடன் செலவிட்ட ஒவ்வொரு நிமிடங்களும் சிறந்தவை. வாழ்க்கையில் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், நிலையாக இருக்க வேண்டும் என்பதை உங்களிடம் இருந்து கற்றுக் கொண்டேன். உங்களுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். மீண்டும் மீண்டும் உங்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். என்றும் உங்களின் தீவிர ரசிகை!” என்று கூறியுள்ளார்.

‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தில் கண் சிமிட்டி இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய பிரியா வாரியரை யாரும் மறந்திருக்க முடியாது.