விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ராதிகா ஆப்தே?

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். பான் இந்திய மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது. இதனை பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகை சார்மி கவுர் இணைந்து தயாரிக்கின்றனர். ஜூன் மாதம் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராதிகா ஆப்தே தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.