2025-ம் ஆண்டை தன் வசப்படுத்திய திரிஷா!

திரிஷா நடிப்பில் இந்த ஆண்டு 6 படங்கள் வெளியாகின்றன.

கடந்த 25 ஆண்டுகளாக சினிமாத் துறையில் கோலோச்சி வருபவர், நடிகை திரிஷா. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவருக்கு இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது.

அதன்படி, திரிஷா நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் மலையாளத்தில் ‘ஐடென்டிட்டி’, தமிழில் ‘விடாமுயற்சி’, சமீபத்தில் ‘குட் பேட் அக்லி’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இது மட்டுமில்லாமல் இன்னும் 3 படங்கள் இந்த ஆண்டு வெளியாக இருக்கின்றன.

அதில் ஒன்று மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தக் லைப்’. இப்படம் வருகிற ஜூன் மாதம் வெளியாக உள்ளது. அடுத்ததாக தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ‘விஸ்வம்பரா’ என்ற படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு அல்லது ஆயுத பூஜையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவதாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 45-வது படத்திலும் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படமும் இந்த ஆண்டுக்குள் வெளியாகிவிடும் என்கிறார்கள். இதன் மூலம் அவர் சினிமாவில் தன்னுடைய இடத்தை மேலும் சில ஆண்டுகளுக்கு வலுப்படுத்தி உள்ளார். இது மற்ற நடிகைகளுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.