‘மண்டாடி’ படம் எனக்கு மிகவும் சவாலாக இருக்க போகிறது: மகிமா நம்பியார்!

சூரியின் அடுத்த படத்திற்கு ’மண்டாடி’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. சூரிக்கு ஜோடியாக நடிகை மகிமா நம்பியார் நடிக்கிறார்.

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். ‘மண்டாடி’ எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ‘சாட்டை’ பட நடிகை மகிமா நம்பியார் நடிக்கிறார். மேலும், சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அவ்விழாவில், நடிகை மகிமா நம்பியார் பேசியதாவது:-

சிறிய இடைவெளிக்கு பின்னர் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சுமார் ஒன்றரை ஆண்டுகளாக தமிழில் எந்த படத்திலும் கையெழுத்திடவில்லை. மலையாளத்தில் கவனம் செலுத்திவந்தேன்.
மீண்டும் தமிழில் படம் பண்ணும்போது ஒரு வலுவான கதையில் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. இப்படத்தில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் என்னுடைய பெஸ்டை கொடுக்க வேண்டும் . ஏனென்றால் இப்படம் எனக்கு மிகவும் சவாலாக இருக்க போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.