இந்தி திணிப்பில் மகாராஷ்டிராவின் நிலைப்பாட்டை மத்திய அரசு ஏற்கிறதா?: முதல்வர் ஸ்டாலின்!

தேசிய கல்விக் கொள்​கை​யின்​கீழ், மகா​ராஷ்டிரத்​தில் மராத்​தியை தவிர வேறு எந்த மூன்​றாவது மொழி​யும் கட்​டாயமல்ல எனும் தேவேந்​திர பட்​னா​விஸ் நிலைப்​பாட்டை மத்​திய அரசு அதி​காரப்​பூர்​வ​மாக ஏற்​றுக் கொள்​கிற​தா? என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

இதுகுறித்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தனது சமூக வலைதள பக்​கத்​தில் கூறியுள்ள​தாவது:-

மகா​ராஷ்டிர மாநிலத்​தில் இந்​தியை கட்​டாய மூன்​றாவது மொழி​யாகத் திணித்​ததற்​காக கடுமை​யான எதிர்ப்பு எழுந்​துள்ள நிலை​யில், மராத்தி மட்​டுமே கட்​டாய மொழி என கூறுகிறார் அம்​மாநில முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ். இந்தி பேசாத மாநிலங்​களில் இந்​தி​யைத் திணிப்​ப​தற்கு எதி​ராக, மிகப் பரவலாக மக்​கள் தமது கண்​டனங்​களை தெரி​வித்​ததன் விளை​வாக உரு​வான நடுக்​கத்​தின் வெளிப்​பாடு​தான் அவரது இந்த பேட்​டி.

இந்​நிலை​யில், பிரதமரும், மத்​திய கல்வி அமைச்​சரும் பின்​வரு​வனவற்றை தெளிவுபடுத்த வேண்​டும்.தேசிய கல்விக் கொள்​கை​யின்​கீழ், மகா​ராஷ்டிரத்​தில் மராத்​தியை தவிர வேறு எந்த மூன்​றாவது மொழி​யும் கட்​டாயமல்ல எனும் தேவேந்​திர பட்​னா​விஸ் நிலைப்​பாட்டை மத்​திய அரசு அதி​காரப்​பூர்​வ​மாக ஏற்​றுக் கொள்​கிற​தா? அவ்​வாறெனில் தேசிய கல்விக் கொள்​கை​யின்​படி, மூன்​றாவது மொழியை பயிற்​று​விப்​பது கட்​டாயமல்ல என்று தெளி​வான வழி​காட்​டு​தலை மத்​திய அரசு அனைத்து மாநிலங்​களுக்​கும் வழங்​கு​மா? மும்​மொழிக் கொள்​கையை ஏற்​றுக் கொள்​ள​வில்லை என்ற காரணத்​துக்​காக அநி​யாய​மாக தமிழகத்​துக்கு தராமல் நிறுத்தி வைத்​திருக்​கும் ரூ.2,152 கோடியை மத்​திய அரசு விடுவிக்​கு​மா? இவ்​வாறு முதல்​வர் பதிவிட்​டுள்​ளார்​.