அடிக்கடி கண் கலங்குவதாக வெளியான வீடியோ பதிவுகளுக்கு சமந்தா விளக்கம் அளித்துள்ளார்.
மே 9-ம் தேதி சமந்தா தயாரிப்பாளராக அறிமுகமாகும் ‘சுபம்’ படம் வெளியாகவுள்ளது. இதன் வெளியீட்டு விழா நிகழ்ச்சி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் சமந்தா கண் கலங்குவது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. பலரும் இதனை பகிர்ந்து சமந்தாவுக்கு ஆறுதல் கூற தொடங்கினார்கள்.
இந்த வீடியோ பதிவு தொடர்பாக சமந்தா கூறியதாவது:-
நான் இது தொடர்பாக முன்பே சொல்லியிருக்கிறேன். என் கண்கள் பிரகாசமான ஒளிக்கு மிகவும் உணர்திறன் கொண்டவை. அவை தண்ணீராக இருக்கும் என மீண்டும் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ஆகையால், நான் அதனை துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். எனவே, எனது உணர்ச்சிகளை பற்றி நிறைய பதிவுகள் மற்றும் கட்டுரைகள் உலா வருகின்றன.
மேலும், இது என் உணர்ச்சி நிலைக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தற்போது மிகவும் நலமாக, மகிழ்ச்சியாக, உற்சாகமாக இருக்கிறேன். எனவே இதுபோன்ற பதிவுகளுக்கு ஓய்வு கொடுங்கள். இதை மீண்டும் செய்யாதீர்கள். இவ்வாறு சமந்தா கூறியுள்ளார்.