பாக்கி இல்லாமல் பாகிஸ்தான் சீர்குலைக்கப்படலாம்: பார்த்திபன்!

இந்திய எல்லைப் பகுதிகளில் இரவு நேரத்தில் பாகிஸ்தான் அத்துமீறி ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு பதிலடியாக இந்திய ராணுவமும் பாகிஸ்தானின் பல்வேறு முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் பாக்கி இல்லாமல் பாகிஸ்தான் சீர்குழைக்கப்படலாம் எனவும், உலக நாடுகள் ஒன்றிணைந்து பாகிஸ்தானின் அராஜகத்திற்கு தீர்வு காண வேண்டுமென நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் எல்லை பிராந்தியங்களில் மோதல் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை பகுதிகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்திய விமானப்படைத் தளங்கள் மீது பாகிஸ்தான் ட்ரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. இந்திய விமானப்படை அதற்குத் தகுந்த பதிலடி கொடுத்து, பாகிஸ்தான் ட்ரோன்களை நடுவானில் சுட்டு வீழ்த்தியது. இதற்குப் பதிலடி அளிக்கும் வகையில், இந்திய ராணுவம் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, சியால்கோட் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் விடிய விடிய நீடித்தது. பாகிஸ்தான் ராணுவ தளங்கள், விமானப்படை தளங்கள் உள்ளிட்ட இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பாகிஸ்தான் தலைநகரில் உள்ள ராணுவ தளங்கள் மற்றும் ராவல்பிண்டி வரை இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியது என விவரங்கள் பரவி வருகின்றன.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தங்கை ஆலிமா கான் வெளியிட்ட பதிவில், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறினாலும், அதற்கான ஆதாரம் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். அவருடைய கூற்றுப்படி, இந்திய ட்ரோன்கள் பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் வரை எளிதாக தாக்குதல் நடத்தியுள்ளன.

இந்த நிலையில் பாக்கி இல்லாமல் பாகிஸ்தான் சீர்குழைக்கப்படலாம் எனவும், உலக நாடுகள் ஒன்றிணைந்து பாகிஸ்தானின் அராஜகத்திற்கு தீர்வு காண வேண்டுமென நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

பாக்கி இல்லாமல் பாக்கிஸ்தான் சீர்குலைக்கப் படலாம் -இந்தியாவின் பழிக்குப் பழி படலத்தில் பதுங்குக் குழியில் பாக். பிரதமர் ஒதுங்கி ஓரோரமாய் குந்திகினு இருப்பதாக ஒரு தகவல். போர் முறையுடன் அனுகும் நம் இந்தியாவை எதிர்கொள்ள இயலாத பாக், நம் பொதுமக்களுக்கு சேதம் விளைவிக்கும் வன்முறை தாக்குதலில் ஈடுபடுகிறது. அதை நம் வான்வெளி அதிரடி yes! S -400 வானிலேயே சுட்டு வீழ்த்தி (காறி துப்பியது போல்) நெருப்பு எச்சிலாய் தரையில் வீழ்த்துவதை மொபைல் திரையில் பார்க்கும் போதே பரவசம் ஆகிறது. ஆயினும் ஆயினும் உலக நாடுகள் ஒன்றினைந்நு பாக் அராஜகத்திற்கு தீர்வு சொல்லி மக்களின் அமைதியை உறுதி செய்ய வேண்டும்! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.