இந்திய எல்லையோர மாநிலங்களில் 32 விமான நிலையங்கள் மூடல்!

இந்திய எல்லையோர மாநிலங்களில் 32 விமான நிலையங்கள் வருகிற 15-ம் தேதி காலை வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய வான்மண்டலங்களில் கட்டுப்பாடுகளை விதித்து விமான சேவைகளை ஒழுங்குப்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்திய அரசிடம் இருந்து மறுஉத்தரவு வரும் வரையில் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, இந்த நிலை நீடிக்கும் என்று என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போர் பதற்றம் காரணமாக வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள 32 விமான நிலையங்கள் வருகிற 15-ம் தேதி காலை 5.29 மணி வரை மூடப்படும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

பயணிகள் புறப்படுவதற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையங்களை அடையுமாறு விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.

32 விமான நிலையங்களின் விவரம்:-

1. அடம்பூர்
2. அம்பாலா
3. அமிர்தசரஸ்
4. அவந்திபூர்
5. பதிண்டா
6. புஜ்
7. பிகானேர்
8. சண்டிகர்
9. ஹல்வாரா
10. ஹிண்டன்

11. ஜெய்சால்மர்
12. ஜம்மு
13. ஜாம்நகர்
14. ஜோத்பூர்
15. காண்ட்லா
16. கங்க்ரா (காகல்)
17. கேஷோட்
18. கிஷன்கர்
19. குலு மணாலி (பூந்தர்)
20. லே

21. லூதியானா
22. முந்த்ரா
23. நலியா
24. பதான்கோட்
25. பட்டியாலா
26. போர்பந்தர்
27. ராஜ்கோட் (ஹிராசர்)
28. சரசாவா
29. சிம்லா
30. ஸ்ரீநகர்
31. தோய்ஸ்
32. உத்தர்லை

இந்த விமான நிலையங்களில் அனைத்து சிவில் விமான நடவடிக்கைகளும் இந்த காலகட்டத்தில் நிறுத்தப்படுகிறது.