ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்று இந்திய விமானப் படை விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான ராணுவ நடவடிக்கைகள் இன்னும் நடந்துகொண்டிருக்கின்றன. ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாக தொழில்முறையுடன் வெற்றிகரமாக நிறைவேற்றினோம். சரியான நேரத்தில் விரிவான விளக்கவுரை அளிக்கப்படும். சரிபார்க்கப்படாத தகவல்களை ஊகிக்கவோ, பரப்பவோ வேண்டாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தப்பட்ட நிலையில் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. விமான நிலையங்களின் சேவை எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. 32 விமான நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் சாலை, ரயில் போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.