நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) குடும்ப பிரச்சினை சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ரவி மோகன் அவருடைய மனைவியை பிரிந்த பிறகு பாடகி கெனிஷா உடன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ரவி மோகன் மனைவி நீண்ட அறிக்கையும் வெளியிட்டு இருக்கிறார். இந்த நிலையில் கெனிஷா சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் ரவி மோகன் பற்றி பேசியிருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கவனத்தை பெற்று வருகிறது.
பிரபலங்கள் வாழ்க்கை வெளியே தெரியாத வரைக்கும் தான் ரகசியமாக இருக்கும். பிரபலங்களின் சின்ன விஷயம் வெளியே தெரிய ஆரம்பித்து விட்டால் அது பூதாகரமாக வெடிக்க தொடங்கிவிடும். அதுபோலத்தான் ரவி மோகன் குடும்ப பிரச்சனையில் இப்போது சோசியல் மீடியா பக்கம் பேசப்பட்டு வருகிறது. காதலித்து திருமணம் செய்து கொண்ட ரவி மோகன் தன்னுடைய மனைவி ஆர்த்தியுடனான திருமண பந்தத்தில் இருந்து தான் விலகுவதாக கடந்த வருடத்தில் அறிவித்திருந்தார். அந்த நேரத்தில் பாடகி கெனிஷாவுடன் அவர் பழகி வருவதால் இவர்கள் இருவருக்கும் காதல் அதனால் தான் ரவி மோகன் விவாகரத்து செய்யப் போகிறார் என்றெல்லாம் செய்திகள் பேசப்பட்டன. ஆனால் அதற்கு ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவருமே மறுப்பு தெரிவித்திருந்தனர். நாங்க நல்ல நண்பர்கள் நாங்கள் இணைந்து ஹீலிங் சென்டர் தொடங்க போகிறோம் அதற்காகத்தான் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் விளக்கம் கொடுத்து இருந்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஒரே வண்ண உடையில் கலந்து கொண்டனர். கணவன் மனைவி போல இவர்கள் இருவரும் அந்த நிகழ்ச்சிக்கு வந்ததை பார்த்ததும் மொத்த சோசியல் மீடியா பக்கங்களும் இவர்களுடைய புகைப்படங்கள் மட்டும்தான் வலம் வந்தது. அதை பார்த்து கடுப்பான ரவிமோகனின் மனைவி ரவி மோகன் இப்போது என்னுடைய குழந்தைகளுக்கு அப்பா தான் எங்களுக்கு இன்னும் விவாகரத்து நடக்கவில்லை என்று நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் கெனிஷா சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது எனக்கு ஜெயம் ரவி (ரவி மோகன்) ரொம்பவும் பிடிக்கும். அவருடைய ரசிகை நான். என்னுடைய பாடல் நிகழ்ச்சிக்கு ஜெயம் ரவி தான் ஹெஸ்டாக வரப்போகிறார் என்று சொன்னார்கள் எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது நடிகர் ஜீவா தான். ஜுவா எனக்கு பல வருடங்களாக நண்பராக இருக்கிறார். அவருடைய குடும்பத்தினரும் எனக்கு நன்கு தெரியும். ஜீவாவின் மனைவி ரொம்ப நல்லவங்க. அவங்க என்னிடம் ஃபேமிலி பிரெண்ட் ஆக இருக்கிறாங்க. அவங்களுடைய ஏற்பாட்டில் தான் இசை நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு ஜெயம் ரவி வந்தது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. அவங்க முன்னாடி நான் பாட போறேன் என்பது எனக்கு ஹாப்பியாக இருந்தேன்.
பிறகு நான் பாடி முடித்ததும் வந்திருந்தவர்கள் யாரும் கைதட்டவில்லை. ரொம்பவும் கஷ்டப்பட்டு பாடினேன் ஆனால் யாரும் கைதட்டவில்லை, அய்யோ நல்லா இல்லையோ என்று அதிர்ச்சியா இருந்தது. அப்போது ஜெயம் ரவி தான் முதலில் பேச தொடங்கினர். பாடலைக் கேட்டு வியந்து போய் இருக்கீங்கன்னு தெரியுது அவரை பாராட்டலாம் என்று அவர் சொன்ன பிறகு எல்லோரும் கை தட்டி இருந்தார்கள். நான் எப்போதுமே ஜெயம் ரவியின் ரசிகை தான் என்று அந்த பேட்டியில் கெனிஷா பேசியிருக்கிறார்.