தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மே 19ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே வெளியாக உள்ளது தெரிய வந்துள்ளது. அதேபோல் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் நாளை மறுநாள் பிற்பகலில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தெர்வு முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் 95.03 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றது. மொழிப் பாடத்துடன் தொடங்கிய பொதுத்தேர்வு, சமூக அறிவியல் பாடத்துடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்வு எழுதிய மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்திருக்கின்றனர்.
இதனிடையே மே 19ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முதலே 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முன் கூட்டியே வெளியாகும் என்று தகவல் வெளியாகியது. இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், மார்ச் ஏப்ரல் 2025ல் நடைபெற்ற 2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு (SSLC) மற்றும் மேல்நிலை முதலாமாண்டு (பொதுத்தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி காலை 9 மணிக்கும், பிற்பகல் 2 மணிக்கும் வெளியிடப்படப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்கள்மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https://resultsdigilocker.gov.in www.tnresults.nic.in என்று இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். அதேபோல் 11ஆம் வகுப்பு மாணவர்கள், தங்களின் தேர்வு முடிவுகளை https://resultsdigilocker.gov.in www.tnresults.nic.in என்ற இணையதளத்தில் பார்த்து கொள்ள முடியும்.
தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும். தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.