தூத்துக்குடி தாமிர ஆலை (ஸ்டெர்லைட்) எதிர்ப்புப் போராட்டத்தில் ஆட்சியாளர்களின் அதிகார கொடுங்கோன்மைக்கு தங்கள் இன்னுயிரை இழந்த போராளிகளின் ஈகத்தை 7ஆம் ஆண்டு நினைவுநாளில் நினைவுகூர்வோம் என்று சீமான் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-
2018 ஆம் ஆண்டு அன்றைய அதிமுக ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட அப்படுகொலைக்கு நீதியைப் பெற்றுத்தருவோம் என்று வாக்குறுதி அளித்து அதிகாரத்தை அடைந்த திமுக இன்றுவரை கொல்லப்பட்டர்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத்தரவில்லை!
யார் கொன்றார்கள்? யாருடைய உத்தரவில் கொன்றார்கள்? ஏன் கொன்றார்கள்? எதற்காக கொன்றார்கள்? அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? எந்த விசாராணையும் கிடையாது!
அதற்காக அமைக்கப்பட்ட அம்மையார் அருணா ஜெகதீசன் ஆணையம் வழங்கிய அறிக்கை மீது என்ன நடவடிக்கை எடுத்தது திமுக அரசு? எதுவுமில்லை!
ஆலையை மூட நீதிமன்றம் உத்தவிட்ட பின்னரும் அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காதது ஏன்?
கொன்று குவித்த காவல்துறை அதிகாரிகளைக் குற்றவாளி கூண்டில் ஏற்றதாதது ஏன்?
உத்தரவிட்ட கொடியவர்கள் யார் என்ற உண்மையை உலகிற்கு சொல்லாமல் தடுத்தது ஏன்?
என்ற கேள்விகளுக்கு இன்றுவரை விடையில்லை!
கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிதியைத் தந்த திமுக அரசு, நீதியைப் பெற்றுத்தரவில்லை! மாறாக, குற்றஞ்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு தந்து அழகு பார்த்தது!
எல்லாவற்றையும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்! தன்னெழுச்சியாக வீதியில் இறங்கிப் போராடியது போல ஒருநாள் இக்கொடுமைகள் அனைத்திற்கும் எம்மக்களே தீர்ப்பு எழுதுவார்கள்!
தூத்துக்குடி தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர் ஈந்து நாம் வாழும் பூமியை, விளைநிலத்தை, நிலத்தடிநீரினை, தூய காற்றை, சுற்றுச்சூழலை, வருங்காலத்தலைமுறையின் நல்வாழ்வினைக் காத்துநின்ற காவல் தெய்வங்களான ஈகியர் அனைவருக்கும் எம்முடைய வீரவணக்கம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.