டிஜிட்டலாக மாற்றம் செய்யப்பட்ட வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என்று நடிகை கிரண் கேட்டுக்கொண்டிருக்கிறார். அத்துடன் காவல்நிலையத்தில், பரபரப்பு புகார் ஒன்றையும் கிரண் தந்துள்ளார். இந்த புகாரின்பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஜெமினி என்ற படத்தில் அறிமுகமாகும்போதே, அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடிகை கிரண். கமலுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’, விஜய்க்கு ஜோடிய ‘திருமலை’, பிரசாந்துக்கு ஜோடியாக “வின்னர்” உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து பிரபலமானார். கிரண் நடிக்கும் படங்களில் குத்து பாட்டுக்கு என்று தனி நடிகையே தேவையில்லை என்ற அளவிற்கு அவரே கிளாமர் டிரஸ்ஸில் ஆடி தனக்கென ரசிகர் கூட்டத்தை சேர்த்தார். பட வாய்ப்புகளை இழந்த கிரண் பிறகு படவாய்ப்புகள் கிடைக்கவும், அக்கா, அத்தை போன்ற கேரக்டர்கள் அமைந்தன.. வேறு வழியின்றி அவைகளிலும் நடக்க ஆரம்பித்தார்.. தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காத நிலையில், இன்ஸ்டாகிராமில் எல்லைமீறும் ஆபாசத்திலும் இறங்கினார்.. அதில், தன்னுடைய விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு, பட வாய்ப்புக்காக முட்டி மோதி முயற்சிகளை செய்தார்..
படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காவிட்டாலும், கிரணின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகின.. இந்த கவர்ச்சி போட்டோக்களுக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர்.. ஒரு பக்கம், ரசிகர்கள் திரண்டாலும், மறுபக்கம், கடுமையான கண்டனங்களையும், விமர்சனங்கள் கிரண் எதிர்கொள்ள துவங்கினார்.. சப்ஸ்க்ரைபர் ஒன்லி ப்ளான்களையும் அறிமுகம் செய்து, அவருடைய எக்ஸ்க்ளுசிவ் புகைப்படங்கள், வீடியோ சாட்டிற்கு பெரும் அளவு கட்டணத்தை வசூலித்தார்.. இதற்கு நடுவில், ஏராளமான வதந்திகளும், சர்ச்சைகளும், சலசலப்புகளும் கிரண் மீது குவிந்தது.. குறிப்பாக, கடந்த 2022-ல் கிரண் பெயரில் துவங்கப்பட்டுள்ள செயலி மூலம், கிரணுடன் உரையாடுவதற்கும் பழகுவதற்கும், டின்னர் சாப்பிடுவதற்கும், போட்டோக்களை பெறுவதற்கும் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளதாக செய்திகள் கசிந்திருந்தன.
அதாவது கிரணின் இஸ்டாகிராம் பக்கத்தில், கிரணுடன் 5 நிமிடங்கள் ஆடியோ கால் பேச, 9,999 ரூபாய் என்றும், 25 நிமிடங்கள் வீடியோ கால் பேச, ரூ.25,0000 என்றும், 15 நிமிடத்துக்கு 14,000 ஆயிரம், கவர்ச்சியுடன் எடுக்கப்பட்ட போட்டோக்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் என்றும் தகவல் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அப்போது கிரண் பேசும்போது, “சினிமா வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் யாருமே எனக்கு உதவி செய்யவில்லை.. ஒரு பிரபல நடிகர் நைட்டு போன் பண்ணி ரூமுக்கு வரியான்னு கேட்டார். பிகினி உடைகளை அணிந்து போஸ் கொடுத்தால் நான் என்ன தப்பானவளா? என் உடம்பை காட்டுறேன். அதற்கு எனக்கு முழு உரிமையும் இருக்கு. அதை வைத்து தப்பு தப்பா பேசவும், எழுதவும் இவங்களாம் யாரு? கிளாமராக போட்டோக்களை பதிவிடுவதால், சிலர் என்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள்” என்று கிரண் அந்த பேட்டியில் வருத்தத்துடனே கூறியிருந்தார்.
இந்நிலையில் கிரண் தனது ஆபாச வீடியோவை சிலர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள் என அதிர்ச்சி தகவலை தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக கிரண் சைபர் க்ரைம் போலீஸில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது மார்பிங் செய்யப்பட்ட போலி ஆபாச வீடியோக்களை சிலர் தயாரித்து இணையத்தில் பரப்பி வருவதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளார். மேலும் தனது போலி ஆபாச வீடியோவை டவுன்லோட் மற்றும் ஷேர் செய்பவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிரண் கேட்டுக் கொண்டுள்ளார்.