தமிழகத்தில் குட்கா, புகையிலைப் பொருள்களுக்கான தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
புகையிலை அடிப்படையிலான பான்மசாலா உள்ளிட்ட பொருள்கள் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியவை என்பதால் அவற்றை தமிழகத்தில் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் இது நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தடையானது நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், குட்கா, புகையிலைப் பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த மே 23-ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில், மேலும் மேலும் ஓராண்டுக்கு(2026 மே 23 ஆம் தேதி வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை பிறப்பித்துள்ளது.