தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்திக்காத தலைவர் இருக்கும் ஒரே கட்சி தவெக: திவ்யா சத்யராஜ்!

திமுகவில் இணைந்துள்ள திவ்யா சத்யராஜ் அவ்வப்போது விஜய்யை விமர்சித்து வருகிறார். தற்போது, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது என்றும், தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்திக்காத தலைவர் இருக்கும் ஒரே கட்சி தமிழக வெற்றிக் கழகம் தான் என்றும் திவ்யா சத்யராஜ் விமர்சித்துள்ளார்.

பிரபல நடிகர் சத்யராஜி்ன் மகள் திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். இவர், கடந்த ஜனவரி மாதம் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த திவ்யா சத்யராஜ், தவெக கட்சியையும், அக்கட்சியின் தலைவர் விஜய்யையும் கடுமையாக சாடி வருகிறார். திமுக தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் திவ்யா சத்யராஜ், விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில்தான், திவ்யா சத்யராஜ், தவெகவை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்திக்காத தலைவர் இருக்கும் ஒரே கட்சி தமிழக வெற்றிக் கழகம் தான் என்று விமர்சித்துள்ளார்.

திவ்யா சத்யராஜ் வெளியிட்டு இருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது:-

“தவெவிற்கு என ஒரு தனிச்சிறப்பு உள்ளது. தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்திக்காத தலைவர் இருக்கும் ஒரே கட்சி தவெகதான். பெண்களை மதிக்காத தொண்டர்கள் அதிகமாக உள்ள ஒரே கட்சியும் தவெகதான்” என்று சாடியிருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம் திமுகவை தனது அரசியல் எதிரியாக அறிவித்து அக்கட்சிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. பதிலுக்கு திமுக தலைமை, தவெகவை நேரடியாக விமர்சிக்காமல் மறைமுகமாகவே விமர்சித்து வருகிறது. முதல்வர் ஸ்டாலினும், தவெகவை இதுவரை நேரடியாக அட்டாக் செய்தது இல்லை. எனினும், திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தவெகவிற்கு சமயம் கிடைக்கும் போதெல்லாம் கடும் விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக தவெகவில் இருந்து அண்மையில் விலகி திமுகவில் இணைந்த வைஷ்ணவி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.