அட்ஜெஸ்ட்மென்ட்டை நடிகைகள் தவிர்க்கலாம்: யோகலட்சுமி!

அட்ஜெஸ்ட்மென்ட்டை தவிர்ப்பது நடிகைகள் கையில்தான் இருக்கிறது என்றார் நடிகை யோகலட்சுமி.

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருந்த நடிகை யோகலட்சுமி இது குறித்து கூறியதாவது:-

சினிமாவில் பெண்களுக்கு சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நாம் நடந்துகொள்வது, நாம் எதிர்கொள்வது என்ற ஒன்று இருக்கிறது. அதுதான் இத்துறையில் ரொம்பவே முக்கியம் என்று நினைக்கிறேன். சிலர் வந்து அப்படி தவறாக கேட்டாலும் நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியேத்தான் இருக்க வேண்டும். உங்களுக்கு அப்படி அட்ஜெஸ்ட் செய்து வாய்ப்பு வேண்டுமென்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

வேண்டாம் என்று உறுதியோடு முடிவெடுத்துவிட்டால் அந்த உறுதியான முடிவில்தான் இருக்க வேண்டும். அது இருந்தால்தான் வாய்ப்பு கிடைக்கும். அப்படி அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யவில்லை என்றால் வாய்ப்பு கிடைக்காது என்றால் அந்த வாய்ப்பு வேண்டுமா வேண்டாமா என்று முடிவெடுப்பது சம்பந்தப்பட்டவரின் தனிப்பட்ட உரிமை. நாம் இருப்பதை பொறுத்துதான் அனைத்தும் இருக்கின்றன. வேண்டாம் என்றால் வேண்டாம்தான். அதில் உறுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

யோகலட்சுமி, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்துக்கு முன்னதாக ‘ஹார்ட் பீட்’, ‘சிங்கப்பெண்ணே’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.