வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியின் படப்பிடிப்பு பணி தொடக்கம்!

இயக்குனர் வெற்றிமாறன் சிம்புவை வைத்து கேங்ஸ்டர் கதையில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவரது நடிப்பில் கடந்த 5-ந் தேதி தக் லைப் படம் வெளியானது. இந்த படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் STR 49 , தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR 50, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் STR51 என அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இற்கிடையில் சிம்பு அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வடசென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் கதையாக இப்படம் உருவாக உள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், வெற்றி மாறன் -சிம்பு கூட்டணி உருவாகவுள்ள புதிய படம் தொடர்பான அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இந்த கூட்டணி படப்பிடிப்பு பணியை தொடங்கியுள்ளது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. அதில் நடிகர் சிம்பு கேங்ஸ்டர் லுக்கில் காணப்படுகிறார்.

இந்த படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் ஆகிய முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். மேலும், நெல்சன் மற்றும் கவின் கேமியோ கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.