நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்: சீமான்!

நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுகுறித்து மதுரையில் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள். நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவை தவிர வேறு யாரும் போதைப்பொருள்களை பயன்படுத்தவில்லையா?.

அதானி துறைமுகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் போதைப்பொருள்கள் சிக்கியதை அனைவரும் அறிவோம். போதைப்பொருள்களை பயன்படுத்திய 2 பேரை கைது செய்து விட்டீர்கள். விற்றவர் எங்கே?. போதைப்பொருள் எங்கிருந்து வருகிறதோ அந்த வேரை வெட்ட வேண்டும். ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவையும் கைது செய்து விட்டால் போதைப்பொருள் புழக்கம் நின்று விடுமா?. இந்தியா முழுவதும் போதைப்பொருள் பயன்பாடு உள்ளது.

இந்த வழக்கில் அதிமுகக்காரர் விற்பனை செய்ததால், பிடித்திருக்கிறார்கள். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள், உருவாக்குபவகளை பிடிக்க வேண்டும். அந்த 2 பேரை தவிர வேறு யாரும் பயன்படுத்தவில்லையா? பாடகி சுசித்ரா எவ்வளவு கொக்கைன் விருந்து பரிமாறப்படுகிறது என்று சொல்கிறார்கள். கோயில்கள், கல்லூரிகள் முன்னிலையில் கஞ்சா விற்பனை செய்கிறார்கள்.

குடிப்பதற்கு வண்டியில் செல்லலாம், ஆனால் குடித்த பின் வண்டியில் செல்லக் கூடாது.. அப்படியென்றால் ஒரு ஆம்புலன்ஸில் ஏற்றி எங்களை வீட்டில் சென்று விட்டுவிடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.