இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும், அவர்கள் வந்த படகுடன் இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

தமிழகத்தில் நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்து வருகிறார்கள். இப்படி கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்களும் நின்றபாடில்லை. எல்லை தாண்டியதாக கூறி மீனவர்களை கைது செய்வது மட்டும் இன்றி அவர்களது படகுகளை பறிமுதல் செய்து, மீன் பிடி பொருட்களை சேதப்படுத்தி பல்வேறு அட்டூழிய செயல்களிலும் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறிய செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. எனினும் இதற்கு இதுவரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் தான், நேற்று அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. ராமேஸ்வரத்தில் இருந்து ஒரு படகில் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்குள் சென்றுள்ளனர். மீன்பிடித்துவிட்டு நேற்று அதிகாலை கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது வடக்கு மன்னார் கடற்பரப்பில் ரோந்து சென்று கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வர மீனவர்களை கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும், அவர்கள் வந்த படகுடன் இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.