சத்தீஸ்கரில் கேரள கன்னியாஸ்திரிகள் கைது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சத்தீஸ்கரில் கேரள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சிறுபான்மையினர் கண்ணியத்திற்கும், சம உரிமைகளுக்கும் தகுதியானவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மதமாற்றம் புகாரின்பேரில் சத்தீஸ்கரில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் முதல்வர் கூறியுள்ளதாவது:-

சத்தீஸ்கரில் பஜ்ரங் தளம் அமைப்பினரால் கேரள கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தலுக்கும், பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகியுள்ளது மிகவும் கவலையளிக்கிறது. இந்த நடவடிக்கை வகுப்புவாதத்தின் ஆபத்தான வடிவத்தை பிரதிபலிக்கிறது. இந்தியாவில் சிறுபான்மையினர் கண்ணியத்திற்கும் சம உரிமைகளுக்கும் தகுதியானவர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.