லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாவது உறுதியாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட சினாப்சிஸ் குறிப்பின்படி, கூலித் தொழிலாளர்கள் – கேங்ஸ்டர்கள் பின்புலத்தைக் கொண்ட கதைக்களத்தைக் கொண்டது ‘கூலி’ படம். இதில், குழந்தைகள் பார்க்கக் கூடாத அளவுக்கு அதீத வன்முறைக் காட்சிகள் இருப்பதன் காரணமாக ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
