ஆணவக் கொலை, ஜாதி கொலையும் நடப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன்: கஸ்தூரி!

கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லையில் நடந்த ஆணவக் கொலை செய்யப்பட்ட இளைஞர் கவினின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவின் என்ற இளைஞர், வேறு ஒரு சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததற்காக அப்பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவர், கடந்த ஞாயிற்றுக் கிழமை கவினை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார். நாட்டையை பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து நடிகை கஸ்தூரி பேசி உள்ளார்.

இதுகுறித்து நடிகை கஸ்தூரி அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:-

எந்த சமுதாயத்தில் ஆணவக் கொலை, ஜாதி கொலையும் நடப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன், வயிற்று எரிச்சலாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இன்றும் எதுவுமே மாறவில்லை என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. கடந்த பத்து வருடங்களுக்கு முன்னாடி சௌந்தர்யா, சங்கர் விஷயத்தில், நடுரோட்டில் சங்கரை வெட்டி கொலை செய்தார்கள் அதற்கு காரணம் ஜாதி என்கிற ஒரே ஒரு விஷயம் தான்.

கவின் எல்லா வகையிலும் தகுதி உள்ள ஒரு ஆணாக இருந்திருக்கிறார். கவின் பட்டியல் இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும், எந்தவித சலுகையையும் பயன்படுத்தி அவர் கோல்ட் மெடல் வாங்கவில்லை. தன்னுடைய கடினமான உழைப்பாலும், திறமையாலும் கோல்ட் மெடல் வாங்கி இருக்கிறார். எனக்கு திருமண வயதில் ஒரு மகள் இருந்தால், நிச்சயம் கவினுக்கு திருமணம் செய்துவைத்து இருப்பேன். அப்படி ஒரு திறமையானவராக இருந்த கவினை கண்ணுக்கு தெரியாத ஜாதியால் இன்று போட்டு தள்ளி விட்டார்கள். இன்று ஜாதிக்கு எதிராக பலர் போராடுபவர்கள் எல்லாம், ஜாதியால் பாதிக்கப்பட்டவர்கள் தான். இந்த மாற்றம் இது ஜாதி திமிரால் சுற்றுபவர்கள் மனதில் தான் முதலில் மாற்றம் வர வேண்டும்.

இரண்டு நாளுக்கு முன் ஜாதி கொடுமையால் கவின் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சமூகத்தை செய்தவர்கள் அனைத்து கட்சிகளிலும் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது அவர்கள் அனைவரும் இதற்கு எதிராக இறங்கி போராட்டம் நடத்தி தங்களுடைய சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். இதை யாரும் செய்ய முன்வரவில்லை. இதை கேட்பதற்கு நீ யார் என்று போர் கொடி தூக்கி கொண்டு வருவார்கள். இந்த காலகட்டத்தில் கொலை செய்தவர்களை கூட நாம் கேள்வி கேட்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.

பெயரிலேயே ஜாதியை வைத்து இருக்கும் ஹரி நாடார் நேற்று ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில், ஆவணவக்கொலை நடக்கக்கூடாது என்றால், யாரும் காதலிக்காதீர்கள் என்று சொல்லி இருக்கிறார். இது எந்த வகையில் நியாயம், நேற்று கவினின் காதலில் சுபாஷினி வீடியோ வெளியிட்டு பேசி இருக்கிறார். அதில, நாங்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்தோம். கொஞ்ச நாள் காத்து இருக்க சொன்னோன். ஆனால், எங்கள் காதல் தம்பிக்கு பிடிக்காததால், இப்படி செய்துவிட்டான். இப்படியாகும் என்று நான் நினைக்கவே இல்லை. இந்தோட இந்த விஷயத்தை விட்டுவிடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். எப்படி இந்த விஷயத்தை இத்தோடு விடமுடியும். கவின் உசுரு போயிடுச்சி சுபாஷினியை எப்படி விட முடியும். இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.