அன்பும், விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும்: மு.க. ஸ்டாலின்!

எதிர்பார்ப்புகளற்ற அன்பும், விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என தனது 50-வது திருமண நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் கூறியுள்ளதாவது:-

அரைநூற்றாண்டாக என் வாழ்வின் துணையாக – என்னில் பாதியாக துர்கா அவர்கள் நுழைந்து, தன்னுடைய அன்பால் மணவாழ்வை மனநிறைவான வாழ்க்கையாக அளித்துள்ளார். அவர் மீதான அளவற்ற அன்பே என் நன்றி.

எதிர்பார்ப்புகளற்ற அன்பும் – விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என இளைய தலைமுறையினருக்குச் சொல்லிக் கொள்கிறோம். வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழ்ந்திட விழைகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.