ஆண்கள் ஏன் முருங்கை விதை சாப்பிடணும் தெரியுமா?

முன்னூறு நோய்களை தீர்க்கக்கூடியது முருங்கைக்கீரை என்பார்கள்.. அந்தவகையில் ஆண்களுக்கு உதவும் முருங்கைக்கீரை பொடியை எப்படி சாப்பிடலாம்? அதை எப்படி வீட்டிலேயே எளிய முறையில் தயார் செய்வது என்பது குறித்து சுருக்கமாக பார்க்கலாம்.

பெண்களுக்கு எந்த அளவுக்கு முருங்கைக்கீரை உதவுகிறதோ, அதுபோலவே ஆண்களுக்கும் அபரிமிதமான நன்மையை தரக்கூடியது இந்த முருங்கையிலைகள்.. ஆண்களின் புராஸ்டேட் சுரப்பி வீக்கத்தை கட்டுப்படுத்த இந்த முருங்கைதான் உதவுகிறது.. புராஸ்டேட் என்பது ஆண்களுக்கான பாலியல் சுரப்பியாகும்.. ஆண்களுக்கு சுரக்க வேண்டிய டெஸ்டோஸ்டிரான் என்ற ஹார்மோன் சுரப்பு குறையும்போது, இந்த புராஸ்டேட் சுரப்பி வீங்கிவிடும்.. அப்படி புராஸ்டேட் சுரப்பியின் வீக்கம் இருந்தால், சிறுநீர் கழிப்பதிலும் சிரமம் ஏற்பட்டுவிடும்..

அதேபோல, ஆண் உறுப்பில் ரத்த ஓட்டத்தில் சிக்கல் இருந்தால், விறைப்பு தன்மையிலும் பிரச்சனை ஏற்பட்டுவிடும்.. அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், கட்டுக்கடங்காத சர்க்கரை நோய் இருந்தாலும், விறைப்புதன்மையிலும் குறைபாடு வரலாம். இதுபோன்ற குறைகளை தீர்க்கவே முருங்கை விதைகள் உதவுகின்றன. ஆரோக்கியமான விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, முருங்கை விதைகளை எப்படி பயன்படுத்துவது? முருங்கைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதற்குள்ளிருக்கும் விதைகளை எடுத்து நிழலில் நன்றாக காயும் வரை உலர்த்த வேண்டும். பிறகு, இந்த விதையை மிக்ஸியில் தூள் செய்து, சலித்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். இந்த பொடியை பசும்பாலில் தினமும் 21 நாட்கள் இரவு குடித்து வந்தால் பலன் கிடைக்கும். அல்லது முருங்கை விதைகளை நிழலில் உலர்த்தி எடுத்து வைத்து கொண்டு, தேவைப்படும்போது, நெய்யில் வதக்கி தூள் செய்து பசும்பாலுடன் கலந்து குடிக்கலாம்.

எனினும் மருத்துவர்களிடம் முறையான வழிகாட்டுதலுடன் இந்த முருங்கை விதை பொடியை எடுத்து கொள்வது, ஆரோக்கியத்துக்கு மேலும் நன்மை பயக்கும். முருங்கைக்கீரையையும் ஆண்கள் அடிக்கடி சாப்பிட்டு வரவேண்டும்.. அல்லது சூப் போல சாப்பிடலாம்.. இந்த முருங்கை சூப் சாப்பிடுவதால், மலட்டுத்தன்மை மட்டுமல்லாமல், ரத்தசோகை, உடல் சூடு, மலச்சிக்கல், தலைமுடி உதிர்வு, அல்சர், வாய் புண் என பல்வேறு பிரச்சனைகளுக்கு மருந்தாகிறது.

சிலர் இந்த கீரையில் கஞ்சி போல செய்து சாப்பிடுவார்கள்.. அதாவது, பச்சரிசியை நொய்யாக உடைத்து, அதில் கடலை பருப்பு, வெந்தயம், பூண்டு பற்கள், ஒரு கைப்பிடி முருங்கைக்கீரை சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும். பிறகு ஒரு வாணலில் நெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் வறுத்து, நொய்யரசி வெந்ததுமே அதில் கொட்டி, உப்பு சேர்த்து கிளறவேண்டும்.. இந்த கஞ்சி ஆண்களுக்கு சோர்வை போற்றி, உடல் பலத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரக்கூடியது. இதனை பெண்களும், குழந்தைகளும் சாப்பிடலாம்.