மாரடைப்பு வராமல் தடுக்க இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க!

சமீப காலமாக மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு காரணம் இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களில் கெட்ட கொழுப்புக்கள் படிந்து இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்துவது தான். இவ்வாறு கெட்ட கொழுப்புக்கள் தேங்க நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளும், உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையும் தான் முக்கிய காரணம். ஆனால் எப்படி உணவுகளால் இரத்தக்குழாய்களில் கொழுப்புக்கள் படிகிறதோ, அதேப் போல் உணவுகளைக் கொண்டே இரத்தக்குழாய்களில் படிந்துள்ள கொழுப்புக்களை அகற்றலாம். அதுவும் ஒருசில பழங்களை தினமும் சிறிது உட்கொண்டு வந்தாலே, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இரத்தக்குழாய்களை சுத்தமாக வைத்து, மாரடைப்பு வரும் அபாயத்தைத் தடுக்கலாம்.

இப்போது எந்த பழங்களை உட்கொண்டால் மாரடைப்பின் அபாயத்தைத் தடுக்கலாம் என்பதைக் காண்போம். ஆப்பிளுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட ஒரு பழம் தான் கொய்யாப்பழம். இந்த பழத்தில் உள்ள சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் இதயத்திற்கு செல்லும் தமனிகளில் ப்ளாக்குகள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது. மாரடைப்பு வரக்கூடாதெனில் கொய்யாப்பழத்தை வாங்கி அடிக்கடி சாப்பிடுங்கள். பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி போன்றவற்றில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, இரத்தக்குழாய்களில் ப்ளாக்குகள் உருவாவதைத் தடுக்கிறது. ஆகவே பெர்ரிப் பழங்களை முடிந்தால் அவ்வப்போது வாங்கி சாப்பிடுங்கள்.

சிட்ரஸ் பழமான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸின்ட்டுகள் உள்ளன. இவை தமனிகளில் ப்ளாக்குகள் உருவாக்கத்தைத் தடுப்பதோடு, கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றன. எனவே அடிக்கடி ஆரஞ்சு பழத்தை வாங்கி சாப்பிட முயற்சி செய்யுங்கள். மாதுளம் பழத்தில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்வதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் கெட்ட கொழுப்புக்களின் அளவையும் குறைக்க உதவுகின்றன. எனவே மாரடைப்பு ஏற்படக்கூடாதெனில் தினமும் ஒரு மாதுளையை சாப்பிட முயற்சித்து வாருங்கள்.

திராட்சையிலும் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமான அளவில் உள்ளன. இதுவரை திராட்சையை உட்கொள்ளாமல் இருந்தால், இனிமேல் திராட்சையை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள். இப்படி உட்கொண்டு வந்தால் மாரடைப்பில் அபாயத்தைத் தடுக்கலாம். அனைத்து காலங்களிலும் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய பழம் தான் பப்பாளி. இந்த பப்பாளிப் பழத்தில் பாப்பைன் மற்றும் வைட்டமின் சி போன்றவை உள்ளன. இவை கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதைத் தடுக்க உதவுவதோடு, ப்ளாக்குகளின் உருவாக்கத்தையும் தடுக்கிறது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அதுவும் ஆப்பிளை தினமும் உட்கொண்டு வந்தால் இதய நோயின் அபாயத்தைத் தடுக்கலாம். குறிப்பாக உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து மாரடைப்பின் அபாயத்தைத் தடுக்கலாம்.