எந்த இடத்தில் எவ்வளவு கொழுப்பு? – டாக்டர். ராஜன்

உடலில் கொழுப்பு சேர்ந்து விட்டதால் சதை போட்டு விட்டது. அதனால் கொழுப்பை குறைக்க ஜிம்முக்கு போகிறேன் என்று சொல்வதுண்டு. ஆனால் கொழுப்பு இருக்கிறது என்றால் குறிப்பாக எந்த இடத்தில் இருக்கிறது? என்று யாருக்கு தெரிவதில்லை. இனிமேல் இந்த கவலை வேண்டாம். ஏனெனில் நம்முடைய உடலில் எந்த இடத்தில் கொழுப்பு உள்ளது? நிறைய உள்ளதா? குறைய உள்ளதா? கொழுப்பு இருந்தால் அதை குறைக்க எந்த மாதிரியான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கும் அதி நவீன ஸ்கேனர்கள் வந்து உள்ளன.

இந்த ஸ்கேனர்கள் முன் 30 செகண்டு நின்றால் போதும். மறு நொடி நீங்கள் எதிர் பார்க்கும் அத்தனை விவரங்களும் உங்கள் கைகளில் இருக்கும். குறிப்பிட்ட இடத்தில் உள்ள கொழுப்பை குறைக்க எந்த மாதிரியான உடற்பயிற்சி செய்யலாம் என்ற ஆலோசனை கூட கிடைக்கும். தன் முன் நிற்கும் உருவத்தை 3டி முறையில் ஸ்கேனிங் செய்யும் இந்த நவீன ஸ்கேனர்கள், கொழுப்பு இடம், அளவு போன்றவற்றை வரைபடமாக வரைந்து கொடுத்து விடும்.

இந்த எந்திரங்கள் எக்ஸ்ரே போல இல்லாமல் ரேடியோ அலைகள் மூலம் இயங்குவதால் அடிக்கடி பயன்படுத்தலாம். எந்த பாதிப்பும் கிடையாது. அது போல குழந்தைகள், கர்ப்பிணிகள், காயங்களில் இருந்து சகஜ நிலைக்கு திரும்பி வரும் நோயாளிகள் ஆகியோரின் உடலில் கொழுப்பு மாற்றங்களை கண்காணிக்கலாம்.

குறிப்பிட்ட இடத்தில் கொழுப்பு சேருவது போல முன் கூட்டியே தெரிந்து கொள்வதால் உடற்பயிற்சிகள் மூலம் உடலை கட்டுக்கோப்பாக பேணி பாதுகாக்கலாம். இந்த ஸ்கேனரின் முக்கியமான பணி, கொழுப்பை குறைப்பது தான் என்பதால் இதய நோய்கள், நீரழிவு நோய்கள் வர வாய்ப்பே இல்லாமல் போய் விடுகிறது.