டைரக்டர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி!

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மணிரத்னம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் தலைசிறந்த டைரக்டர்களில் ஒருவராக இருப்பவர் மணிரத்னம். டைரக்டர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் என பலவற்றிலும் தனது திறமையை நிருபித்து வருபவர். தமிழில் இவர் இயக்கிய முதல் படம் பகல் நிலவு. 1980 கள் துவங்கி தற்போது வரிசையாக ஏராளமான ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இந்திய சினிமாவில் தனிக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். பலரின் கனவை நினைவாக்கிய மணிரத்னம் தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக பெரும் முயற்சி எடுக்கப்பட்டு நிறைவேறாமல் போன கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் களமிறங்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இந்திய சினிமாவின் பிரபலமான நட்சத்திரங்களை வைத்து இந்த படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி முடித்துள்ளார். இந்திய சினிமாவின் அடையாளமாகவும், தமிழ் சினிமாவின் பெருமையாகவும் கருதப்படும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் இன்று காலை டைரக்டர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மணிரத்னம் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்து வந்தனர். ஆனால் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்த மணிரத்னத்தின் மனைவியும், மணிரத்னத்திற்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று காலை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் தன்னுடைய தந்தைக்கு 92 வயது, அதே போல் தாய்க்கு 88 வயது. எனவே தனிமைப்படுத்துவது அவசியம் என்பதால் மருத்துவமனையில் இருக்கிறோம். அவர் நலமாக இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.