பிரதமர் மோடிக்கு தலை வணங்குகிறேன்: விஷால்!

தமிழ் திரையுலகில் நடிகர் தயாரிப்பாளர், நடிகர் தயாரிப்பாளர் சங்கங்களின் நிர்வாகி என பல முகங்களை கொண்டுள்ள நடிகர் விஷால் திடீரென தற்போது பிரதமர் நரேந்திர மோடியை தனது டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் துறையில் நாயகனாக அவதாரம் எடுத்தவர் நடிகர் விஷால். அந்தப் படம் ஓரளவு ஏ சென்டரில் அவருக்கு வரவேற்பு கொடுத்த நிலையில் சண்டைக்கோழி திரைப்படம் தான் ஏ பி சி என அனைத்து சென்டர்களிலும் ரசிகர்களிடைய நடிகர் விஷால் கொண்டு சென்றது. அதற்குப் பிறகு அவர் நடித்த சில படங்கள் வெற்றி பெற்ற நிலையில் பல சொதப்பல் படங்களையும் கொடுத்து முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருந்து சற்றே விலகி இருக்கிறார் விஷால். இருந்த போதும் தற்போது அவர் பெரிதும் எதிர்பார்த்து இருக்கும் படம் லத்தி. நடிகர் விஷால் கமிஷனர், அசிஸ்டன்ட் கமிஷனர் என பல வேடங்களில் நடித்து கலக்கிய அவர் தற்போது கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்திருக்கும் இந்தப்படத்தை அவர் பெரிதும் நம்பி இருக்கிறார். இழந்த தனது மார்க்கெட்டை இப்படம் மீட்டுக் கொடுக்கும் என நம்புகிறார்.

இந்த நிலையில் அரசியலிலும் ஆர்வம் காட்டி வரும் விஷால் கடந்த முறை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் சில காரணங்களால் அது கைகூடாமல் இருந்த நிலையில் ஆசையை நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் தீர்த்துக் கொண்டார். நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம் என இரண்டிலும் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை வெகுவாக புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

காசிக்கு நடிகர் விஷால் அவரது நண்பர் நடிகர் நந்தா மற்றும் சிலருடன் புனித பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அங்கு கங்கை சுத்தமாக இருப்பதைக் கண்டு நெகிழ்ந்த விஷால் பிரதமர் நரேந்திர மோடிக்கு தலைவணங்குவதாக கூறியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு கங்கையை சுத்தம் செய்ய வேண்டும் என திட்டம் தீட்டினார். கோயில்கள் புதிதாக புனரமைக்கப்பட்டதோடு கங்கையில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டதாகவும் தற்போது கங்கை புனிதம் அடைந்திருப்பதாக பாஜகவினர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியை தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியிருக்கிறார் நடிகர் விஷால். இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், “அன்புள்ள மோடி ஜி, நான் காசிக்குச் சென்றேன். அற்புதமான தரிசனம் / பூஜை செய்து, கங்கை நதியின் புனித நீரை தொட்டேன். கோவிலை புதுப்பித்து, அதை இன்னும் அற்புதமாகவும், எளிதாக எவரும் தரிசனம் செய்வதற்காக நீங்கள் செய்த மாற்றத்திற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுக்கு தலை வணங்குகிறேன். வணக்கம்” என பதிவிட்டுள்ளார்.