7ஜி ரெயின்போ காலனி 2′ குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது!

கடந்த 2004 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘7ஜி ரெயின்போ காலனி’. ரவி கிருஷ்ணா நடிப்பில் ரிலீசான இப்படம் தமிழ் சினிமாவின் கிளாசிக் காதல் படமாக இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ‘7ஜி ரெயின்போ காலனி 2′ குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்பவர் செல்வராகவன். பல அழுத்தமான காதல் படங்களை இயக்கியுள்ள இவர் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருவதால், படம் எதுவும் இயக்காமல் இருக்கிறார். இதனால் செல்வராகவனின் டைரக்ஷனை ரசிகர்கள் மிஸ் பண்ணுகின்றனர். இந்நிலையில் அவரது இயக்கத்தில் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கிளாசிக் காதல் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியானது ‘7ஜி ரெயின்போ காலனி’. ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் ஆகியோர் நடித்திருந்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தன. இன்றளவும் ரசிகர்களின் பேவரைட்டாக அவர்களின் பிளே லிஸ்டில் ஒலித்து கொண்டிருக்கின்றன.

‘7ஜி ரெயின்போ காலனி’ அழுத்தமான காதல் படமாக வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இருந்தது. செல்வராகவன் ஒவ்வொரு காட்சிகளையும் அழகான கவிதை போல் வடிவமைத்து இருந்தார். இன்றளவும் ரசிகர்கள் பலரின் பேவரைட் காதல் படமாக ‘7ஜி ரெயின்போ காலனி’ உள்ளது. தமிழ் சினிமாவின் அழகான காதல் கிளாசிக் படங்கள் லிஸ்டில் செல்வராகவனின் ‘7ஜி ரெயின்போ காலனி’ தவறாமல் இடம்பிடிக்கும். அந்தளவுக்கு ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகளை சத்தமே இல்லாமல் துவங்கி மேற்கொண்டு வந்தார் செல்வராகவன்.

இந்நிலையில் இப்படம் ஷுட்டிங்கில் இருப்பதை உறுதி செய்யும் விதமாக தனது எக்ஸ் தளத்தில் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் செல்வராகவன். இரண்டு காதலர்கள் நடந்து போவதை போன்று வெளியாகியுள்ள போஸ்டரில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் படத்தில் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவல் எதுவும் குறிப்பிடப்படவில்லை.