புத்தாண்டை முன்னிட்டு ஷாம் நடித்துள்ள ‘அஸ்திரம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஷாம். தமிழ் சினிமாவில் கடந்த 2001 இல் வெளியான 12பி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து “உள்ளம் கேட்குமே, லேசா லேசா” என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஜெயம் ரவியின் தில்லாலங்கடி, விஜய்யின் வாரிசு போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றார்.
இவர் தற்போது அரவிந்த் ராஜகோபால் இயக்கத்தில் ஆக்சன் திரில்லர் படத்தில் கதாநாயகனாக நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு ‘அஸ்திரம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நீரா மற்றும் வெண்பா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பெஸ்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க கே எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார். கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் உரிமை 5ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்து விட்டது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
இந்தநிலையில் புத்தாண்டை முன்னிட்டு ‘அஸ்திரம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 21-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.