பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை சாக்ஷி அகர்வால் இன்று தன்னுடைய நெடுநாள் காதலரை திருமணம் செய்து இருக்கிறார். அப்போது திருமண புகைப்படங்களை சாக்ஷி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்
நடிகை சாக்ஷி அகர்வால் சினிமாவில் நுழைவதற்கு முன்பு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வணிக ஆலோசகராக லட்சத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தாலும் தான் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால் 2018 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஓராயிரம் கோணல் என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் காலடி எடுத்து வைத்திருந்தார். வேலை பார்த்துக் கொண்டே இருக்கும் போது மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருந்த சாக்ஷி பல பெரிய விளம்பரங்களில் நடித்திருக்கிறார். அந்த நேரத்தில்தான் அவருக்கு ராஜா ராணி திரைப்படத்தின் மூலமாக சின்ன கேரக்டரில் அறிமுகமாகி இருந்தாலும் சாக்ஷிக்கு பெரிய அளவில் அறிமுகம் பிரபலத்தை கொடுத்தது காலா படம் தான். நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு காலா திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக சாக்ஷி நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து விசுவாசம் திரைப்படத்தில் டாக்டராக சாக்ஷி நடித்திருந்தார். அந்த நேரத்தில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக சாக்ஷி கலந்து கொண்டார். அதற்குப் பிறகு அவருக்கு பெரிய அளவில் பிரபலம் கிடைத்தது.
அதோடு இணையத்தில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அடிக்கடி தன்னுடைய கிளாமர் புகைப்படங்கள் மற்றும் ஒர்க் அவுட் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை தன்னுடைய பாலோவர்ஸ்களாக மாற்றி வைத்திருக்கிறார். அதுபோல தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் பலருடைய மனம் கவர்ந்த சீசன் என்றால் அது மூன்றாவது சீசன் என்று தான் சொல்வார்கள். அந்த சீசனில் கவின், சாண்டி மாஸ்டர், சாக்ஷி அகர்வால், வனிதா, காயத்ரி, ரேஷ்மா பசிபிளிட்டி என்று பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அந்த சீசனை கலகலப்பாக வைத்திருந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ச்சியாக சில திரைப்படங்களில் சாக்ஷி நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தன்னுடைய காதல் விஷயத்தை இத்தனை வருடங்களாக மறைத்து வைத்திருந்த நிலையில் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். இவருக்கு சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
சாக்ஷி அகர்வால் தன்னுடைய சிறு வயது நண்பரான நவ்நீத் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். அது குறித்து அவர் வெளியிட்ட புகைப்படங்களுக்கு “என்னுடைய சிறுவயது நண்பர்கள் முதல் ஆத்ம தோழர்கள் வரை.. கோவன் வானத்தின் கீழ் காதல் மற்றும் மலைகளுக்கு மத்தியில் நானும் நவ்நீத்தும்.. ‘என்றென்றும்’ என்றானோம்” என்று பகிர்ந்து இருக்கிறார்.