நடிகை ரச்சிதா மகாலட்சுமி செய்தியாளர்கள் சந்திப்பின் போது, சமூக வலைத்தளத்தில் அரைகுறை ஆடை போடும் பெண்களுக்காக இளைஞர்கள் லைக் போடுவது குறைந்தால் அரைகுறை ஆடை போடுபவர்கள் குறைவார்கள் என்று ஆபாச இன்புளுயன்ஸர்களை விமர்சித்து இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்த சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் மூலம் பெரிய அளவில் பிரபலம் கிடைத்தது. தற்போது வெள்ளித்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் நடித்த எக்ஸ்ட்ரீம் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளில் ரச்சிதா தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சமூக வலைத்தளத்தில் சிலர் பிரபலமாக வேண்டும் என்று அரைகுறை ஆடை போட்டு ஆபாச வீடியோக்கள் வெளியிடுகிறார்களே அது பற்றி உங்க கருத்து என்ன என்று கேட்டதற்கு அது அவர்களுடைய விருப்பம் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் அவர்களுடைய உடை குறைத்து, அவர்கள் தங்கள் பிரபலமாகி கொள்ள வேண்டும் என்று அவர்கள் பாதுகாப்பாக இருந்து கொண்டு போடும் போஸ்ட்களால் சாதாரண பெண்களையும் பாதிக்கிறது. தாங்கள் பிரபலமாக வேண்டும் என்று சிலர் ஆபாசமாக உடை அணிகிறார்கள். அந்த வீடியோவை பார்ப்பவர்கள் வீடியோ போட்டவர்களை எதுவும் செய்ய முடியாது என்பதால் தெருவில் போகும் பெண்கள் மீது அவர்களுடைய தவறான பார்வை விழுகிறது. அதனால் தான் பல பெண்கள் வாழ்க்கை சீரழிகிறது. ஆபாசமாக வீடியோ போடுபவர்கள் லைக் கிடைக்க வேண்டும் என்பதற்காக போடுகிறார்கள். ஒரு வீடியோ போட்டால் லைக் அதிகரிப்பதை பார்த்ததும் இன்னும் இது போல போடலாம் என்று அவர்கள் யோசிக்கிறார்கள். அதனால் லைக் போடுபவர்கள் அதை கடந்து போய்விட்டால் நாம் என்ன செய்தாலும் இவர்கள் கண்டு கொள்ளவில்லையே என்று ஆபாச உடை அணிந்து வீடியோ போடுவது குறைத்து விடுவார்கள் என்று அந்த பேட்டியில் ரட்சிதா பேசி இருக்கிறார்.
தற்போது பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ரச்சிதா கொடுத்த விளக்கம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.