அடுத்த 9 மாதங்களுக்கு நான் எந்தப் படங்களிலும் நடிக்கப் போவதில்லை. வருகிற அக்டோபர் வரை படத்தில் நடக்க மாட்டேன். கார் பந்தயத்தில் அதிகம் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று அஜித் கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னதாக பந்தயத்துக்கான பயிற்சியில் அஜித் ஈடுபட்டிருந்த போது, சாலை நடுவே இருந்த தடுப்பில் மோதியதில் அவரின் கார் சுக்குநூறாக நொறுங்கியது. இதில், காயமின்றி அஜித் உயிர் தப்பினார். அந்த விபத்துக்குப் பின்னர், அஜித் தற்போது முதல் முறையாக துபையின் 24 எச் ரேசிங்கில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது:-
அடுத்த 9 மாதங்களுக்கு நான் எந்தப் படங்களிலும் நடிக்கப் போவதில்லை. வருகிற அக்டோபர் வரை படத்தில் நடக்க மாட்டேன். கார் பந்தயத்தில் அதிகம் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு போட்டியாளராக மட்டுமின்றி ஒரு உரிமையாளராகவும் கூறுகிறேன். அக்டோபருக்குப் பின்னர் மார்ச்க்கு இடைப்பட்ட காலங்களில் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன்.
2003 ஆம் ஆண்டில் பிஎம்டபிள்யூ கார் பந்தயத்தில் கலந்துகொண்டு முழுமையாக முடித்தேன். 2004 ஆம் ஆண்டில் பிரிட்டிஸ் ஃபார்முலா-3 கார் பந்தயத்தில் கலந்துகொண்டேன். ஆனால், அதை என்னால் முழுமையாக முடிக்க முடியவில்லை. என்னுடைய 18 வயதில் கார் பந்தயத்துக்கான பயிற்சியைத் தொடங்கினேன். அதன்பிறகு படத்தில் நடிப்பதற்கு கவனம் செலுத்தியதால் அதைத் தொடர முடியாமல் போனது. 2010 ஆம் ஆண்டில் ஐரோப்பிய கார் பந்தயத்தில் கலந்துகொண்டேன். இருந்தாலும் அதையும் தொடரமுடியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.