பெரிய உதடால் என்னை கேலி செய்தனர்: பூமிகா!

தமிழ் ரசிகர்களால் ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட நடிகை தான் பூமிகா. விஜய், சூர்யா, ஸ்ரீகாந்த், மகேஷ் பாபு என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார்ல. இப்பொழுது, அக்கா, அண்ணி என குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், சினிமாவில் நுழைவதற்கு முன் தான் சந்தித்த கேலி, கிண்டல் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

நடிகை பூமிகா தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் இன்று வரை நினைவுக்கு வருவது “சில்லுனு ஒரு காதல்” படத்தில் வரும் ஐஷூ கதாபாத்திரம் தான். அதில் அந்த அளவுக்கு மிகவும் எதார்த்தமாக நடித்து இருப்பார். ரோஜா கூட்டம் திரைப்படத்திற்கு பிறகு தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்த படத்தில் நடித்து மீண்டும் கம்பேக் கொடுத்த பூமிகா. தமிழ் மட்டுமில்லாது போஜ்புரி, பஞ்சாபி, ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என பல மொழிகளில் 24 வருடங்களாக நடித்து வருகிறார். அண்மையில், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பிரதர் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் அக்காவாக நடித்திருந்தார். தம்பி மீது அதிக பசம் கொண்ட அக்காவாக பிரதர் படத்தில் நிறைவான நடிப்பை கொடுத்து இருந்தார்.

இந்த படம் வெளியான போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த பூமிகா. சிறு வயதில் தனக்கு நடந்த கேலி மற்றும் கிண்டல் குறித்து பேசி உள்ளார். அதில், என் உதடு பெரியதாக இருந்ததால், சிறுவயதில் என்னை பலர் கேலி, கிண்டல் செய்தார்கள். இதனால் மன வேதனை அடைந்து பல நாட்கள் அழுது இருக்கிறேன். ஆனால், இப்போது, அந்த பெரிய உதடுதான் என்னுடைய அடையாளமாக இருக்கிறது என்றார்.

தொடர்ந்து பேசிய பூமிகா, பாலிவுட்டில் படவாய்ப்புகள் வந்த போது நான், மற்ற மொழி படங்களில் பிஸியான நடித்துக்கொண்டு இருந்ததால், என்னால் நடிக்க முடியவில்லை. அந்த நேரத்தில் பல நல்ல கதைகள் என்னைத் தேடி வந்தன. ஆனால், அதன்பிறகு, நான் எதிர்பார்த்த விஷயங்கள் படத்தில் இல்லை, சில கதாபாத்திரம் எனக்கு பொருந்தவில்லை. இதனால் பாலிவுட்டில் இடைவெளி அதிகரித்து பட வாய்ப்புகள் குறைந்தது. ஆனால், எம்.எஸ். தோனி படத்திற்கு பிறகு பெயர் சொல்லும் அளவிற்கு பல நல்ல கதைகளில் நான் நடித்து வருகிறேன் என பூமிகா அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.