பட ப்ரோமோஷனுக்காக. குளியல் அறை வீடியோ ரிலீஸ் பண்ணேன்: ஊர்வசி ரவுதெல்லா!

பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுத்தெல்லா, லெஜண்ட் சரவணன் நடித்த லெஜண்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான முகமாக மாறினார். இவருக்கென்று தனி ரசிகர்கள் இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு இவரின் குளியலறை வீடியோ ஒன்று இணையத்தில் வெறியாக மிகப்பெரிய புயலை கிளப்பியது. இது குறித்து பேட்டி அளித்திருக்கும் ஊர்வசி ரவுத்தெல்லா, அந்த வீடியோ தனக்கு தெரிந்தே வெளியிட்டது என்று கூறி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.

நடிகை ஊர்வசி ரவுத்தெல்லா ஹிந்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை கூறியிருந்தார். அதில் குறிப்பாக, அவர் கூறிய ஒரு செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதாவது குஸ்பைதியா படத்தில் இருந்து ஊர்வசி ரவுத்தெல்லா குளிக்கும் குளியல் காட்சி ஒன்று இணையத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் புயலை கிளப்பியது. இது குறித்து பேசிய ஊர்வசி, அந்த குளியல் அறை காட்சி தனக்கு தெரிந்து தான் வெளியிட்டதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், படத்தின் தயாரிப்பாளர்கள் தன்னிடம் கேட்டு தான் அனுமதி வாங்கிக்கொண்டு தான் அந்த காட்சியை வெளியிட்டதாகவும் கூறினார். அதாவது குஸ்பைதியா படத்தில், சிறப்பாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த காட்சியும் இல்லை என்பதால் படம் வெளியில் வந்தால் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என தயாரிப்பாளர் வருத்தப்பட்டு என்னிடம் கதறி அழுதார். மேலும் அவர் இந்த படத்தை எடுப்பதற்காக நிலங்களை அடமானம் வைத்து விட்டதாகவும். இதனால் இந்த படம் ஓடவில்லை என்றால் நிலங்கள் அனைத்தும் கையைவிட்டு போய்விடும் பின் தெருவிற்கு வரும் நிலை வந்துவிடும் என்றார். இதனால், வேறு வழியில்லாமல், அந்த குளியலறை காட்சியை வெளியிட நான் ஒப்புக்கொண்டேன். அந்த குளியலறை காட்சி பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும் என்று நினைத்தேன். பெண்கள் எப்போதும், எந்த இடத்திலும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதற்காக எச்சரிக்கையாக வெளியிடப்பட்டது என்று ஊர்வசி ரவுதெல்லா அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், வீடியோ வெளியான போது, வீடியோவைப் பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன். இப்படி செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை என பேசியது எல்லாம் பொய்யா என்றும், ஒரு படம் ஓட வேண்டும் என்றால் இப்படிக்கூடவா செய்வீர்கள் என்று இணையத்தில் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.