இலங்கைத் தமிழரான லாஸ்லியா இலங்கையில் ஆங்கராக தன்னுடைய கேரியரை துவங்கியவர். விஜய் டிவியின் பிக்பாஸ் தமிழ் 3 சீசனில் பங்கேற்று தன்னுடைய இலங்கை தமிழால் அனைவரையும் கவர்ந்த லாஸ்லியா, அடுத்ததாக அருண் இயக்கத்தில் ஹரி பாஸ்கர் உடன் இணைந்து மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது சற்று பூசிய உடல்வாகுடன் காணப்பட்ட லாஸ்லியா, தற்போது 25 கிலோ வரை எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
இலங்கைத் தமிழரான லாஸ்லியா, விஜய் டிவியின் பிக்பாஸ் தமிழ் சீசன் மூன்றில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்றவர். இலங்கையில் தொலைக்காட்சி ஆங்கராக தன்னுடைய கேரியரை துவங்கிய லாஸ்லியா அதன் மூலம் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக மாறினார். தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை தன்னுடைய அழகுத் தமிழால் கவர்ந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தன. ஆயினும் கொரோனா தொற்று பரவல் காரணமாக அதிகமான பட வாய்ப்புகளை இவரால் ஒப்புக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.
தற்போது இயக்குனர் அருண் இயக்கத்தில் நடிகர் ஹரி பாஸ்கருடன் இணைந்து மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தில் லாஸ்லியா ஹீரோயினாக நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது சற்று பப்ளியாக இருந்த லாஸ்லியா, தற்போது இந்த படத்தில் ஸ்லிம்மாக மாறியுள்ளார். இதனிடையே தனக்கு எப்படி எடை கூடியது மற்றும் எப்படி குறைந்தது என்பது உள்ளிட்ட பல விஷயங்களை அவர் தனது பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். தனது உடல் எடையை 25 கிலோ வரை அவர் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தான் முன்னதாக இலங்கையில் இருந்தபோது 50 கிலோ எடை தான் இருந்ததாகவும் பிறகு வீட்டில் சமைக்க நேரமில்லாததால் வெளியில் அதிகமாக சாப்பிட்டு 75 கிலோ எடை கூடி விட்டதாகவும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால் தொடர்ந்து தன்னுடைய உடல் எடையை குறைக்கும் முயற்சியில் அவர் 10 கிலோ வரை எடையை குறைத்ததாகவும் அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து இந்தியா வந்தபோது 60 கிலோ எடையுடன் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சென்னையில் இலங்கையை சேர்ந்த உறவினர் வீட்டில் தங்கியதாகவும் அங்கே அவருக்கு இலங்கையின் உணவுகள் சாப்பிட கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் காலையில் வெண்பொங்கல் சமைக்கப்பட்டதால் அதை சாப்பிடும் பழக்கம் இல்லாத நிலையில், தயிரில் சக்கரை போட்டு சாப்பிட்டு தன்னுடைய காலை உணவை நிறைவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். காலையில் கேக் வரும் என்றும் அதையும் சாப்பிடுவேன் என்றும் லாஸ்லியா தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது தன்னுடைய உடல் எடை 75 கிலோ கூடிவிட்டதாகவும் முகத்திலும் பருக்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை தான் சந்தித்ததாகவும் லாஸ்லியா தெரிவித்துள்ளார். ஆனால் எடையை குறைக்க முடிவு செய்து உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றால் தற்போது 25 கிலோ வரை எடையை குறைத்துள்ளதாகவும் சர்க்கரையை முழுவதுமாக தவிர்த்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
அதிகமான புரோட்டின், ஃபைபர் உணவுகளை எடுத்துக்கொண்டு கார்போஹைட்ரேட் உணவுகளையும் எடுத்ததாகவும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்ததாகவும் இரவு உணவு சாப்பிடுவதை தவிர்த்து விடுவதாகவும் இதன் மூலம் தன்னுடைய சரும பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னை ஸ்லிம்மாக அழகாக மாற்றிக் கொண்டுள்ளார் லாஸ்லயா, இதனால் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.