தெலுங்கு நடிகரை காதலிக்கிறாரா ரிதுவர்மா?

தமிழில், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘நித்தம் ஒரு வானம்’, ‘மார்க் ஆண்டனி’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர், நடிகை ரிது வர்மா. இவர் தெலுங்கு நடிகரை காதலிப்பதாக கூறப்படுகிறது.

தமிழில், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘நித்தம் ஒரு வானம்’, ‘மார்க் ஆண்டனி’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர், நடிகை ரிது வர்மா. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரமுடன் ‘துருவநட்சத்திரம்’ படத்திலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், இவர் நடிகர் சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேஜை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் தெலுங்கு நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதிக்கு திருமணம் நடந்தது. முன்னதாக திருமண ஜோடிக்கு அல்லு அர்ஜுன் கொடுத்த விருந்தில் சிரஞ்சீவி குடும்பத்தினருடன் ரிதுவர்மாவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.