அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். இது மட்டுமின்றி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் அவர். இச்சூழலில் அவர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
மாவீரன், அயலான் ஆகிய இரண்டு படங்கள் சிவகார்த்திகேயனுக்கு வரிசையாக வெற்றி படங்களாக அமைந்தன. அந்தப் படங்களுக்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்தார் அவர். கமல் ஹாசன் தயாரித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதன் காரணமாக சிவாவின் மவுசு திரைத்துறையில் அதிகரித்திருக்கிறது. விஜய்யும் சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பதால் கண்டிப்பாக அடுத்த விஜய் சிவாதான் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூற ஆரம்பித்திருக்கிறார்கள். எஸ்கேவின் சம்பளம்கூட 50 கோடி ரூபாயை தொட்டுவிட்டதாக பலரும் கூறுகிறார்கள்.
அமரன் படத்துக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். அவருடன் ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஸ்ரீலீலாவும் நடிக்கிறார். படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில்தான் வெளியாகி சக்கைப்போடு போட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அமரன் பட சமயத்திலேயே சிவகார்த்திகேயன் சோஷியல் மீடியாக்களை யூஸ் செய்வதை நிறுத்தியிருந்தார். இடையில் அவ்வப்போது ஒரு சில போஸ்ட்டுகளை மட்டும் போட்டார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் அதுகுறித்து பேசுகையில், “கடந்த இரண்டு வருடங்களாகவே நான் சோஷியல் மீடியா யூஸ் செய்வதை நிறுத்திவிட்டேன். அப்படி நிறுத்திவிட்டதால் எனக்கு நல்ல விதமான தெளிவு கிடைத்திருக்கிறது. சமூக வலைதளங்களில் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களை கூறுகிறார்கள். அப்படி அவர்கள் கூறும் கருத்துக்களால் எனக்கு குழப்பங்கள் ஏற்படுகின்றன. தெளிவாக முடிவெடுக்க முடியவில்லை. எனவேதான் சோஷியல் மீடியாவிலிருந்து வெளியேறிவிட்டேன். இப்போது எனது மைண்ட் ஃப்ரீயாக் ஐருக்கிறது. ஏகப்பட்ட தேவையற்ற எண்ணங்கள் மனதுக்குள் ஓடுவதை குறைக்க முடிகிறது. ஒரு படம் சரியாக போகவில்லை என்றால் அதற்கான காரணம் என்று சோஷியல் மீடியாவில் தேடினேன். பல கருத்துக்களால் குழம்பி போனதுதான் மிச்சம்” என்றார்.