நடிகை டாப்ஸி நடித்துவரும் “காந்தாரி” பட அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தமிழில் வெளிவந்த ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் டாப்சி. ‘காஞ்சனா’, ‘வந்தான் வென்றான்’, ‘கேம் ஓவர்’, ‘அனபெல் சேதுபதி’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்தியிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார் டாப்ஸி. தற்போது 3 ஹிந்தி படங்களில் பணியாற்றி வருகிறார். நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளில் நடித்து வரும் அவர், ஷாருக்கானுடன் ‘டன்கி’, வருண்தவணுடன் ‘ஜுட்வா 2’ படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காந்தாரி பட படப்பிடிப்பு புகைப்படங்களைப் பதிவிட்டு, “சூழ்நிலை கடினமாகும்போது, வலிமையானவர்கள் சவாலை எதிர்கொள்ள கடினமாக உழைப்பார்கள். இந்த ஒற்றைவரிதான் காந்தாரி படம் எங்களுக்கு கற்றுக்கொடுத்த அனுபவமாகவும் உத்வேகமாகவும் இருக்கிறது. படத்தின் கடைசி கட்டத்தை நோக்கி முன்னேறியுள்ளோம். ஏனெனில் நீங்கள் இதுவரை இல்லாத ஒன்றினை பெறவேண்டுமானால் இதுவரை செய்யாத ஒன்றினை செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.