லாஸ்லியாவின் ஜென்டில்வுமன் பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

லாஸ்லியாவின் ஜென்டில்வுமன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ஜென்டில்வுமன் படத்தை அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்குகிறார். கோமலாஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் லாஸ்லியா பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

ஜெய்பீம் படத்தில் மக்கள் மனங்களைக் கவர்ந்த லிஜோமோல் ஜோஸும், மெட்ராஸ், காலா படத்தில் நடித்து கவனம் ஈர்த்த ஹரிகிருஷ்ணனும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில், ஜென்டில்வுமன் படம் மார்ச் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் டீசர் பிப். 12 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.